நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 21 November 2024

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்

 நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மழைக்கால பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தலைமையாசிரியர் குணசீலராஜ் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். 

இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் வரவேற்றார். தென்திருப்பேரை ஆரம்ப சுகாதார நிலைய பள்ளி சிறார் மருத்துவ குழு  மருத்துவர் டாக்டர் பத்ரி ஸ்ரீனிவாசன் மாணவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டார். 

அதனைத் தொடர்ந்து  பருவ மழைகால பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறப்புரையாற்றிய   மருத்துவர் பத்ரி ஸ்ரீனிவாசன் கூறுகையில், மழைக்காலங்களில் நான்கு வகையான பாதுகாப்பு முறைகளை  மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும். அதில், முதலாவதாக கைகளை கழுவுதல். ஆறு படிநிலைகளின் அடிப்படையில் கைகளை கழுவ வேண்டும், குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும், 

வெளியில் உணவு சாப்பிடுவதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், எப்பொழுதும் காய்ச்சிய குடிநீரை பருக வேண்டும் என்பதை  மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். உடற்கல்வி ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். 

முகமிற்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர், மருத்துவ முகாம் பொறுப்பாளரும் ஓவியக்கலை ஆசிரியருமான அலெக்சன் கிறிஸ்டோபர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வ சுந்தர், பிற ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad