இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தாம் படித்த குளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்களுக்கு கற்றுத்தந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் தலைமை ஆசிரியை லீலாவதி, உதவி தலைமை ஆசிரியை கலைச்செல்வி, வேதியியல் துறை ஆசிரியர் ஜூலியட், விலங்கியல் துறை ஆசிரியர் கென்னடி, அறிவியல் ஆசிரியை ரெஜினா
அனைவரையும் கல்லூரிக்கு அழைத்து வந்தனர். மூன்றாம் ஆண்டு ஆங்கில துறை மாணவி கார்த்திகா அவர்களனைவரையும் வரவேற்று பேசினார். கல்லூரியின் மக்கள் தொடர்பு அதிகாரி தங்கமணி சிறப்புரை வழங்கினார்.
வந்திருந்த ஆசிரியர்களிடம் படித்த மாணவ மாணவிகள் தத்தம் பள்ளி அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக ஒவ்வொரு ஆசிரியர்களின் சிறப்பியல்புகளையும் எடுத்துரைத்து மாணவ மாணவிகள் ஆசிரியர் ஆசிரியை அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசுகள் வழங்கி மகிழ்வித்தனர்.
கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால் கல்லூரியின் நோக்கங்களையும் செயல்படும் விதம் குறித்தும் அவர்களுக்கு தெரிவித்தார். மூன்றாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி கயல் நிகழ்ச்சிகளை அழகாக தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் வசந்தி,கணிதத் துறை பேராசிரியை செல்வ லட்சுமி ஆங்கிலத் துறை, பேராசிரியை சுகிர்த மலர் ஆகியோர் செய்திருந்தார்கள்.
மூன்றாம் ஆண்டு ஆங்கில துறை மாணவி ஆனந்தி நன்றியுரை வழங்க விழா நாட்டுப் பண்ணோடு இனிதே நிறைவடைந்தது.
No comments:
Post a Comment