உடன்குடி பேரூராட்சி, புதுமனை மேலத்தெரு அருகிலுள்ள காமராஜர் தெருவில் புதிதாக தார் சாலை போடும் பணி துவங்கியது. இந்த பகுதியில் புதிதாக வீடுகள் கட்டி குடியிருந்துவரும் மக்களின் கோரிக்கையின் படி தார்சாலை அமைக்கும் பணியை பேரூராட்சி மன்றத் தலைவர் ஹீமைரா அஸ்ஸாப் கல்லாசி தொடங்கிவைத்தார்.
உடன் 13வது வார்டு உறுப்பினர் அஸ்ஸாப் கல்லாசி, 16வது வார்டு உறுப்பினர் T.முகமது ஆபித், 18வது வார்டு உறுப்பினர் சரஸ்வதி பங்காளன், மற்றும் காண்ட்ராக்டர் நிரஞ்சன் குமார், சுகு, சம்சு, சுபியான்,புரோஸ், தமீம், மேகநாதன், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment