About us - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

About us

தமிழக குரல், இது பேசப்படாமல் இருக்கும் செய்திகளை பேசுவதற்கும் பாமரமக்களின் தேவைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று அவர்களின் தேவைகளை பூர்த்திசெய்யவும், நமது மண்ணின் திறமையாளர்களை, நம் மண்ணின் தேவைகளை, நம் மண்ணின் பெருமைகளை உலகறிய செய்யவும், உலக தமிழர்களின் பார்வை இந்த தருமபுரி மண்ணின் மீது திருப்பவும் தொடங்கப்பட்டது.

உலக செய்தியை பேச எண்ணற்ற ஊடகங்கள் உள்ளது, தேசிய செய்திகளை பேச பெரும்பாலும் எல்லா இந்திய மொழிகளிலும் ஊடகங்கள் உள்ளது, நமது மாநில செய்திகளை பேச சொல்லிக்கொள்ளும்படியான ஊடகங்கள் தமிழகத்தில் உள்ளது, ஆனால் நாட்டின் முதுகெழும்பாகிய கிராம செய்திகளை பேச இங்கே பெரும்பாலும் யாரும் இல்லை என்றே சொல்லாம், குறிப்பாக நமது மாவட்ட கிராமங்களின் செய்திகளை இங்கு பேச யாரும் முன்வரவில்லை, அதை செய்வதற்கென துவங்கப்பட்ட தளம் தான் நமது தமிழக குரல் செய்தி தளம்.

இதன் மூலம் சில இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும், அவர்களை சமுதாயத்தின் ஒரு அடையாளமாக மற்ற முடியும் என்கிற நம்பிக்கையில் இந்த தளம் தொடங்கப்பட்டு உள்ளது.

நமது தாரக மந்திரம் "நமது குரல்! நமக்கான குரல்!!" என்பதே, நமது நோக்கம், குறிக்கோள் எல்லாம். வாருங்கள் ஆதரவு கொடுங்கள், இது நமது குரலாக, நமக்கான குரலாக ஒலிக்கும் உங்கள் ஆதரவோடு.

நன்றி,

வினோத்குமார் ஆதிமூலம்,

ஆசிரியர் / நிறுவுனர் - தமிழக குரல்.

+91 9843 663 662 

No comments:

Post a Comment

Post Top Ad