தூத்துக்குடியிலுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீ சங்கரராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை தேர் திருவிழாவிற்கான கொடி ஏற்ற விழா வெகு சிறப்புடன் நடைபெற்றது. விழாவில் கோவிலின் தலைமை பட்டர் செல்வம் தலைமையில் உற்சவ மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் நடைபெற்றதுடன் கொடி மரத்திற்கான சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. நிறைவில் சிவ கோசங்களுடன் கொடி ஏற்றம் பக்தர்கள் பலரும் சூழ்ந்து நிற்க சிறப்புடன் நடந்தது. அதனை தொடர்ந்து தேரில் கால் நடும் விழாவும் நடைபெற்றது.
இதில் செயல் அலுவலர் க. கிருஷ்ணமூர்த்தி, தக்கார் மு. நாகராஜன், தேரோட்ட பவனி குழுவினர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் ஏ. கோட்டு ராஜா, கே. கந்தசாமி, 39 வார்டு கவுன்சிலர் எஸ். சுரேஷ் குமார், பி. எஸ். கே. ஆறுமுகம், பி. சாந்தி, ஏ. டி. சோமநாதன்,, சி. டி. கங்காராஜேஷ், எஸ். சந்தனராஜ், ஜி. கோபால், எஸ். மாரிமுத்து, செ. நெல்லையப்பன், திருவனந்தல் மு. மாரியப்பன், வி. கல்யாண சுந்தரம், பி. முதுகுமாரசாமி, எல். கார்த்திகேய குமார், கு. இ. வைரவநாதன், ஆர். ராதாகிருஷ்ணன் திருக்கோவில் பிரதான பட்டர்கள் ஆர். செல்வம், எம். சங்கரன், எம். சுப்பிரமணியன், சி. சாண்முகசுந்தரம் மற்றும் கோவில் அலுவலர்கள் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment