தமிழ் நாகரிகத்தின் தொட்டில் எனும் பெருமை கொண்டது தாமிரபரணி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெருமிதம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 April 2022

தமிழ் நாகரிகத்தின் தொட்டில் எனும் பெருமை கொண்டது தாமிரபரணி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பெருமிதம்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தாமிரபரணி ஆற்றங்கயோரம் மரம் நடுதல் மற்றும் கரையோர முடிசெடிகள் அகற்றும் பணியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கி. செந்தில்ராஜ் இ. ஆ. ப தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டம் பகுதிக்குட்பட்ட ஆழிக்குடியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். அதனை தொடர்ந்து முத்தாலங்குருச்சி பகுதியில் நடைபெறும் பணியினையும் பார்வையிட்ட அவர் இறுதியில் ஆறாம் பண்ணை பகுதியில் நடைபெறவுள்ள பணியினையும் பார்வையிட்டார். அப்போது அங்கு மக்களிடையே பேசிய அவர் "மரங்களை தாமிரபரணி கரையோரம் நடுவதால் நிழல் பெறலாம், சுத்தமான சுவாச காற்று பெறலாம் மற்றும் மழை பொழிவும் அதிகரிக்கும்.

ஒரு மாவட்டமானது பசுமை சூழ்ந்து இருப்பது அவசியமாகும். அப்போதுதான் மழை பொழிவு அதிகரிக்கும். அந்த வகையில் பார்க்கும் பொழுது நமது மாவட்டத்தில் அதிக அளவு மரம் நடவேண்டும் அதற்கு பொதுமக்களாகிய உங்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என்றார்.தொடர்ந்து அவர் பேசுகையில் தாமிரபரணி ஆறு பொதிகை தொடங்கி தூத்துக்குடியில் நிறைவு பெறுகிறது. அப்படி பார்க்கும் பொழுது தாமிரபரணி ஆற்று நாகரிகமானது தூத்துக்குடியில் தான் காணப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு நடைபெறும் அகழ்வா ராச்சிகளும் அதனுடன் தொடர்புடைய கண்டுபிடிப்புகளும் நிரூபணம் செய்கின்றன என்றார். 

தமிழ் மொழியானது பல ஆண்டுகள் கடந்தும் எழுதப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது. அசோகர் காலத்தில் எழுதியும் பேசியும் வந்த பிராகிர்த மொழி கூட மாற்றம் பெற்றபோதிலும் மாறாத பெருமையுடன் இன்றும் வாழும் தமிழ் மொழி சிறப்பாக உள்ளது. அதனை பேசி வாழும் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நாகரிகத்திற்கு தொட்டிலாக விளங்கும் பெருமை கொண்ட தாமிரபரணியை பாதுக்காக்கும் பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது என்று கூறினார். நிகழ்வில் மரம் நடுவிழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆறாம் பண்ணை ஊராட்சி மன்ற தலைவர் ஷேக் அப்துல்லா காதர், எழுத்தாளர் முத்தா லாங்குறிச்சி காமராசு ஆகியோர் விழாவில் நிழல் தரும் மரங்களை நட்டனர். 

நிறைவில் மரக்கன்று அனைவருக்கும் வழங்கப்பட்டது, விழாவில் ஜமாத் செயலாளர் அப்துல் கனி, பொறியாளர் ஜேசுராஜ், மண்டல அலுவலர் லட்சுமணன் மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad