கோடை விடுமுறை முடிந்து இன்றைய தினம் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில்
ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதன்வாழ்வு ஊராட்சி N.புதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் இன்று(14-06-23)பள்ளிக்கு வந்த மாணவ மாணவிர்களுக்கு ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ்
பொன்னாடை அனைவித்து இனிப்புகள் மற்றும் ரோஜா மலர்கள் வழங்கி வரவேற்றார்.
அத்துடன் தமிழ்நாடு அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தக நோட்டுகளை வழங்கியதுடன் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவு,குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளையும் ஆய்வு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் பவணந்திஸ்வரன், மகாலட்சுமி,
யூனியன் ஆணையாளர் சிவபாலன், வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ்,
உதவி பொறியாளர் ரவி,
பள்ளி தலைமை ஆசிரியை சுமதி,
மருதன் வாழ்வு ஊராட்சி மன்ற தலைவர் வள்ளியம்மாள் ரவி, கொடியங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அருண்குமார்,
N.புதூர் கிளைச் செயலாளர் பாலவிநாயகம்
மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள் மாணவ மாணவிகள் பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment