நாலுமாவடியில் காமராஜர் நர்சரி பள்ளி வகுப்பறைக் கட்டிடம் மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 15 June 2023

நாலுமாவடியில் காமராஜர் நர்சரி பள்ளி வகுப்பறைக் கட்டிடம் மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்.


தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், குரும்பூர் அருகிலுள்ள நாலுமாவடியில் காமராஜர் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் மூலம் காமராஜர் மழலையர் மற்றும் துவக்கப்பள்ளி இந்த கல்வி ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இப்பள்ளிக்கு நாலுமாவடி புதுவாழ்வு சங்கத்தால் புதிய வகுப்பறைக் கட்டிடங்கள் கட்டப்பட்டு புதுப்பொலிவுடன் கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. புதிய வகுப்பறைக் கட்டிடங்களையும், புதிய ஸ்மார்ட் வகுப்பறைகளையும் நாலுமாவடி‌ இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறு‌வனர் சகோ. மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்து ஆசி வழங்கினார். 


விழாவிற்கு காமராஜர் மேல்நிலைப்பள்ளி தலைவர் அழகேசன் தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் திருநீலகண்டன் வரவேற்று பேசினார்.பள்ளி செயலாளர் நவநீதன் முன்னிலை வகித்தார். தாமஸ் ஜெயபால், பள்ளி முதல்வர் கல்பனா மலர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக துணைமுதல்வர் பெர்சியா நன்றி கூறினார். விழாவில் காமராஜர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர்கள் சிவலிங்கம், ஜின்னா, ஊராட்சி மன்ற தலைவர்கள் நாலுமாவடி இசக்கிமுத்து, அம்மன்புரம் ஞானராஜ், அங்கமங்கலம் பானுப்பிரியா மற்றும் சுதாகர் உட்பட பெற்றோர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

Post Top Ad