

ஏரல் வட்டாட்சியர் வரவேற்று பேசினார், புறையூர் அரசு பள்ளி மாணவிகளின் தமிழ் தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது புறையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் வாழ்த்துரை வழங்கினார். பின்பு தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர் கி செந்தில்ராஜ் பேசுகையில் மக்கள் இனி ஒவ்வொரு அரசுத்துறை தேடி அலைவேண்டிய தேவை இல்லை, அதற்கு பதிலாக மக்களை தேடி அரசு உங்கள் ஊர்களில், அதாவது ஒவ்வொரு மாதமும் இரண்டாவது புதன்கிழமைகளில் ஒவ்வொரு கிராமங்களிலும் இதுபோன்ற மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இந்த முகாமில் மக்களின் குறைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார். மேலும் புறையூர் கிராம மக்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பதிலளிக்கையில் இன்றே அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு புதிய இட தேர்வு குறித்து ஆய்வு மேற்கொண்டார், அத்துடன் கூடுதல் பள்ளி வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கும் அடுத்த ஆண்டுக்குள் கட்டித் தர ஆவண செய்யப்படும் என்று கூறினார். வேளாண் துறை சார்பில் நவீன உபகரணங்கள் குறித்து பயனாளிகளுக்கு நேரடியாக விளக்கி கூறினர், விவசாயிகளுக்கு உழவன் செயலி குறித்த விழிப்புணர்வும் அதனை செயல்படுத்தும் விதத்தையும் விளக்கினர்.
மருத்துவ துறை சார்பில் பயனாளிகளுக்கு சர்க்கரை நோய் மற்றும் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்யப்பட்டு இணை நோய் உள்ளவர்களுக்கு மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்கள் வழங்கப்பட்டது, பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய ஊட்டச்சத்து குறித்து நேரடி விளக்கம் அளிக்கப்பட்டது, அதுபோல கால்நடை துறை சார்பில் விலங்கினங்களை பாதுகாக்கப்பட வேண்டிய அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த முகாமில் புறையூர் கிராமத்தில் கடந்த மாதம் 120 க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு 111 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. வருவாய்த் துறை மூலம் ரூ.64,000/- மதிப்பில் 20 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, இயற்கை மரண உதவி தொகை, ரூ.27,63,000/= மதிப்பில் 30 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 20 பயனாளிகளுக்கு உட்பிரிவு பட்டா மாற்றம் மற்றும் பட்டா பெயர் மாற்றம், 21 பயனாளிகளுக்கு நத்தம் சிட்டா நகல், 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.17,712/= மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் விலையில்லா தேய்ப்பு பெட்டி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை மூலம் 2 பயனாளிகளுக்கு ரூ.10958/= மதிப்பில் மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், மகளிர் திட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.90,000/= மதிப்பில் மகளிர் சுய உதவிக்குழு கடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை கலைஞர் திட்டம் மற்றும் SADS SCHEME மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.5,762/= மதிப்பில் வேளாண் கருவிகள், இடுபொருட்கள் என மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ.29,51,432/= மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முடிவில் பள்ளி மாணவிகள் நாட்டுப்பண் பாட விழா இனிதே நிறைவுற்றது, விழா ஏற்பாடுகளை அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment