ஹோலி கிராஸ் மாணவி தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற தகுதி - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 14 June 2023

ஹோலி கிராஸ் மாணவி தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற தகுதி

ஜுன் 21 அன்று கொண்டாடப்படும்  சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு (NCERT) மூலம் "யோகா ஒலிம்பியாட்" போட்டிகள் நடைபெறுகின்றன. அதை முன்னிட்டு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஜூன் 12 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டிகளின் ஜூனியர் பிரிவில், தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவி வர்ஷனி கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஜூன் 18 அன்று புதுடெல்லியில் நடைபெற உள்ள தேசிய அளவிலான யோகா ஒலிம்பியாட் போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார்.  அம்மாணவியை இன்று தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி வெகுவாகப் பாராட்டி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார். நிகழ்வில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முனைவர் கண்ணதாசன், நேர்முக உதவியாளர்  கணேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருள் சகாயம், அமல்சோபியா மற்றும் யோகா மாஸ்டர் சுந்தரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad