செல்போன் வெடித்துச் சிதறியதில் காப்பீடு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் படுகாயம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 June 2023

செல்போன் வெடித்துச் சிதறியதில் காப்பீடு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் படுகாயம்.


தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (40). இவர் நெல்லையில் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று அவர் ஆறுமுகநேரி கணேசபுரத்தில் வசிக்கும் தனது சித்தியின் வீட்டிற்கு சென்று அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில். அப்போது அவரது சட்டை பையில் வைத்திருந்த ஸ்மார்ட் செல்போன் வேகமாக சூடாகியுள்ளது. இதனை உணர்ந்த இசக்கியப்பன் அதனை எடுக்க நினைத்துள்ளார். 


ஆனால் மறு வினாடியே அந்த செல்போன் வெடித்து விட்டது. இதனால் சட்டையில் தீ பிடித்து எரிந்ததால் இசக்கியப்பன் உடலில் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வெடித்து சிதறியதால் ஒருவர் காயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad