தனியார் பேருந்துகளுக்கு துணை போகும் அரசு அதிகாரிகள் - குற்றம் சாட்டும் ராஜாபுதுக்குடி பயணிகள்.
கயத்தாறு, ஜூன்.03, திருநெல்வேலி to கோவில்பட்டிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தனியார் பேருந்து சங்கத்தில் இருந்து, அரசு போக்குவரத்து அதிகாரிகளுக்கு தனியார் பேருந்துகளுக்கு வழி விட பணம் கொடுத்ததாக தெரிகிறது. இதனால் தனியார் பேருந்துகளுக்கு முன்பு செல்லக் கூடிய அரசு பேருந்துகளை, தனியார் பேருந்துகளுக்கு பின்னாலேயே 3 பேருந்துகள் மொத்தமாக செல்கின்றதாக ராஜாபுதுக்குடியை சேர்ந்த பயணிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். அந்த வீடியோவில் தனியார் பேருந்துகளுக்கு பின்னாலேயே வரிசையாக 3 அரசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறது. இதனால் அடுத்த 30 நிமிடம் இடைவெளியில் வேறு எந்த அரசு பேருந்தும் வருவதில்லை. மீண்டும் 30 நிமிடம் இடைவெளிக்கு பின்னர் தனியார் பேருந்துகள் வருகிறது. அதற்கு பின்னர் 2 அரசு பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக செல்கின்றன. ஒரே நேரத்தில் அனைத்து பேருந்துகளும் சென்று விடுவதால், இடைப்பட்ட நேரத்தில் பேருந்தில் பயணம் செய்ய மக்கள் சிரமப்படுகிறார்கள். மேலும் கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து வந்து செல்லும் போக்குவரத்துகளில் இது போன்ற தவறுகள் நடக்கிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுவது போலவே இத்தகைய செயல்பாடு உள்ளது. எனவே சம்பந்த பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு தாலுகா செய்தியாளர் சேதுபதி ராஜா - ஸ்ரீவைகுண்டம்.
No comments:
Post a Comment