தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 1 March 2025

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடியில் புரோட்டா மாஸ்டரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் ஒருவரை போலீசார் பிடிக்க முயன்றபோது, தவறி விழுந்து வலதுகை எலும்பு முறிந்ததால் மாவுகட்டு போடப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி தாளமுத்துநகர், மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முகமது (26). இவர் ஒரு கடையில் புரோட்டா மாஸ்டராக வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு வேலை முடிந்த பிறகு, நண்பர்களுடன் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தாராம். அப்போது, அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பகுதியில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்து உள்ளனர்.

நள்ளிரவில் முகமது வீட்டில் இருந்த போது, மர்ம ஆசாமிகள் சிலர் அங்கு வந்து உள்ளனர். அவர்கள் முகமதுவை வெளியில் அழைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்று விட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த முகமது சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் வழக்கு தொடர்பாக தாளமுத்துநகரை சேர்ந்த விணுபிரபு (22), மேட்டுப்பட்டியை சேர்ந்த மரியதாமஸ் டினோ (24) ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். 

அப்போது தப்பி ஓடிய மரியதாமஸ் டினோ தவறி விழுந்ததில், அவரது வலதுகை முறிந்ததாக கூறப்படுகிறது. அவரை போலீசார் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

கைது செய்யப்பட்ட விணுபிரபுவை ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 8 பேரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad