சங்கர்ஜிவால் தனிப்பட்ட முறையில் பாராட்டினார்.
கடந்த 27.12.2024 அன்று திருச்செந்தூர் முதல் தூத்துக்குடி மெயின் ரோட்டில் உள்ள
முக்காணி பகுதியை சேர்ந்த நயினார் மகன் சுயம்புலிங்கம் (38) என்பவரை குடும்ப பிரச்சினை
காரணமாக அவரது உறவினர்களான அதே பகுதியைச் சேரந்த மாடசாமி மகன் நாராயணன் (38) மற்றும் பூவான் (எ) அய்யாத்துரை மகன் மாரியப்பன் (எ) பெரிய முண்டன் (38) ஆகிய இருவரும் சேர்ந்து தகராறு செய்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது,
அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்
பாஸ்கரன், தலைமை காவலர்கள் குமரேசன், ராஜபாண்டியன் ஆகியோர் இந்த கொலைவெறி தாக்குதலை கண்டதும் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துணிச்சலுடன்
செயல்பட்டு மேற்படி ராஜபாணடியன் எதிரிகள் மீது ஹெல்மட்டை வீசியும், மேற்படி குமரேசன் தனது பலத்தை பயன்படுத்தி எதிரிகளை வீழ்த்தினார்.
மேற்படி சார்பு ஆய்வாளர் மற்றும் தலைமைக்
காவலர்கள் இணைந்து, தாக்குதல் நடத்திய நாராயணன் மற்றும் மாரியப்பன் (எ) பெரிய முண்டன் ஆகிய 2 எதிரிகளையும் திறம்பட நிராயுதபாணியாக்கி காயமடைந்த நபருக்கு மேலும் தீங்கு விளைவிக்காமல் தடுத்தனர்.
மேலும் காவல்துறையினர் சரியான நேரத்தில் தலையிட்டு ஒரு கொலையை தவிர்த்தது
மட்டுமல்லாமல், கொடுங்காயம் பட்டவரை மீட்டு உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்து ஒரு உயிரை காப்பாற்றியுள்ளனர்.
காப்பாற்றிய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன், தலைமை காவலர்கள் குமரேசன் மற்றும் ராஜபாண்டியன் ஆகியோரின் முன்மாதிரியான அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் பொதுமக்கள்
பாதுகாப்புக்கான அர்பணிப்பு ஆகியவற்றை தமிழ்நாடு காவல்துறை தலைமை
இயக்குநர்/படைத்தலைவர் சங்கர்ஜிவால் (03.01.2025) சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் வைத்து பாராட்டுச் சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.
No comments:
Post a Comment