ஏரல் ஆற்றுபாலத்தில் வெள்ளம் குறைந்தது ஆனால் ரோடு தான் காணவில்லை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 16 December 2024

ஏரல் ஆற்றுபாலத்தில் வெள்ளம் குறைந்தது ஆனால் ரோடு தான் காணவில்லை.

ஏரல் ஆற்றுபாலத்தில் வெள்ளம் குறைந்தது ஆனால் ரோடு தான் காணவில்லை 

கடந்து இரு தினங்களுக்கு முன் டிச.13 & 14 ஆகிய நாட்களில் பெய்த கன மழையால் தாமிரபரணியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது, இதனால் ஏரல் மற்றும் ஆத்தூர் ஆற்று பாலத்தில் போக்குவரத்து முழுதும் துண்டிக்கப்பட்டது. 

எனவே கடந்த நான்கு நாட்களாக திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் ஏரல், சிவகளை, ஆழ்வார் திருநகரி மாற்று பாதையாக சென்றன, நேற்று 15.12.2024 ஆற்று பாலத்தில் நீர் வரத்து குறைந்து ஆத்தூர் பாலம் வழியாக மீண்டும் போக்குவரத்து தொடங்கியதால், அந்த வழியாக திருச்செந்தூருக்கு வாகனங்கள் செல்ல தொடங்கின. 

இந்நிலையில் இன்று 16.12.2024 ஏரல் ஆற்று பாலத்தில் வெள்ளம் குறைய தொடங்கியது. ஆனால் வெள்ளம் கரை புறண்டு ஓடியதால் பாலத்தில் உள்ள சாலை ஆங்காங்கே அடித்து செல்லப்பட்டது. ஆனால் போக்குவரத்து செயல் பட முடியாத நிலேஷன் உள்ளது.

இதனால் சாலை சரி செய்த பிறகே ஏரல் குரும்பூர் செல்லும் போக்குவரத்து தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்க பட்டது. 

தமிழக குரல் செய்திகளுக்காக ஏரல் செய்தியாளர் சேதுபதி ராஜா

No comments:

Post a Comment

Post Top Ad