குளத்தூர் டி எம் எம் கல்லூரியில் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Wednesday, 30 March 2022

குளத்தூர் டி எம் எம் கல்லூரியில் கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது.

WhatsApp%20Image%202022-03-30%20at%209.49.01%20PM
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குளத்தூர் டி. எம். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இடையேயான கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. குளத்தூர் பத்திரகாளியம்மன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தாமஸ் முன்னிலையில் தலைவர் ரவீந்திரன்  தலைமையில் கலை நிகழ்ச்சிகள் இனிதே ஆரம்பமானது. 

கல்லூரியின் முதல்வர் முனைவர் அன்பழகன் வரவேற்புரை வழங்க இயக்குனர் முனைவர் கோபால்  குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.  தூத்துக்குடியை சேர்ந்த காமராஜ் கல்லூரி சென்மேரிஸ் கல்லூரி டான் பாஸ்கோ தியாகி தர்மக்கன்  உள்ளிட்ட 10 கல்லூரிகளிலிருந்துமொத்தம் இருபது அணிகள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.  குழு நடனம் ,மைம், ஆடு ஆக்ட் , விரும்பியதை செய்தல் மற்றும் முகத்தில் படம் வரைதல் போன்ற போட்டிகள் நடைபெற்றன.  போட்டியில் கல்லூரி மாணவ-மாணவிகளும் மிகுந்த ஆர்வத்தோடு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.   


ஒவ்வொரு போட்டியிலும் 1,2,3ம் இடங்களை வென்ற மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக பரிசுகள் வழங்கப்பட்டன.  ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகள் அடிப்படையில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முதலாவது இடத்தையும் தூத்துக்குடி ஏ பி சி கல்லூரி, இரண்டாவது இடத்தையும் கைப்பற்றினர்.


அவர்களுக்கான ஒட்டுமொத்த கோப்பைகளை கல்லூரியின் இயக்குனர் முனைவர் கோபால் வழங்கி கௌரவித்தார், போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


விழாவில் அனைத்து நிகழ்ச்சிகளையும் செல்வலட்சுமி திறம்பட அழகாக தொகுத்து வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் செல்வி அனன்சியா நன்றியுரை வழங்க விழா இனிதே நிறைவடைந்தது, கல்லூரியின் அனைத்து பேராசிரியர்களும் விழா சிறப்பாக நடைபெற எல்லா ஏற்பாடுகளையும்  சிறப்பாக செய்திருந்தார்கள். 

No comments:

Post a Comment

Post Top Ad