தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்ததன் பேரில் மாநிலம் முழுவதும் 5 சவரனுக்குட்பட்ட நகை கடன் தள்ளுபடி மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடியிலுள்ள சாயர்புரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஸ்ரீவைகுண்டம் சட்ட மன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் 34 பயனாளிகளுக்கு ரூபாய் 15 லட்சம் மதிப்பில்லான நகை கடன் தள்ளுபடியும், மகளிர் சிறு வணிக கடனாக தலா ஒருவருக்கு 25000 என 7பேருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சாயர்புரம் நகர பஞ்சாயத்து தலைவர் பாக்கிய லட்சுமி, துணைத்தலைவர் பிரியா மேரி, மற்றும் திமுக, காங்கிரஸ் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment