திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்: அமைச்சர் பி. கீதா ஜீவன் பங்கேற்பு!
பசுவந்தனையில் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பசுவந்தனையில் இன்று நடைபெற்ற ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும் - தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் கழக வளர்ச்சிப் பணிகள் குறித்தும், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்தும் உரையாற்றினார்.
கூட்டத்தில், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மார்க்கண்டேயன், ஒன்றிய செயலாளரும் ஓட்டப்பிடாரம் ஒன்றிய குழு துணைத் தலைவருமான காசி விஸ்வநாதன், ஒன்றிய அவைத் தலைவர் பார்த்தசாரதி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் ராஜ், கோமதியம்மாள், ஒன்றிய பொருளாளர் அரி பாலகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் பொன் சத்யராஜ், ராஜா, வெள்ளைச்சாமி, அறங்காவலர் குழு தலைவர் ராமானுஜம் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தாலுகா செய்தியாளர்:சி.நாகராஜ்
No comments:
Post a Comment