திருச்செந்தூர் அருகே மணப்பாடுதிருச்சிலுவை திருத்தல 445வது ஆண்டு பெருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 4 September 2024

திருச்செந்தூர் அருகே மணப்பாடுதிருச்சிலுவை திருத்தல 445வது ஆண்டு பெருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர் அருகே மணப்பாடு
திருச்சிலுவை திருத்தல 
445வது ஆண்டு பெருவிழா
கொடியேற்றத்துடன் தொடங்கியது.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே மணப்பாட்டியில் உள்ள திருச்சிலுவை திருத்தல 445வது ஆண்டு பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலையில் பங்கு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து கொடிபவனி, திருத்தலத்தில் திருப்பலி, திருச்சிலுவை ஆசீர் நடைபெற்றது. பின்னர் பாளையங்கோட்டை புனித சவேரியார் கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ் தலைமையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஆலய பங்கு தந்தை லூர்துவில்சன், உதவி பங்கு தந்தை ஜேம்ஸ் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  
விழாவையொட்டி தினமும் காலை திருச்சிலுவை திருத்தலத்தில் திருப்பலி, நவநாள் திருப்பலி, திருச்சிலுவை ஆசீர், மாலை ஜெபமாலை, பங்கு ஆலயத்தில் ஜெபமாலை மறையுரை, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. வரும் 12ம்தேதி 9ம் நாள் திருவிழாவில்,காலை 6.30 மணிக்கு திருச்சிலுவை பவனி, 13ம் தேதி 10ம்நாள் திருவிழாவில் மாலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோனி தலைமையில் பெருவிழா ஆரம்பர மாலை ஆராதனை, 14ம் தேதி காலை 6 மணிக்கு பெருவிழா திருப்பலி நடைபெறுகிறது. அன்று மாலை 5.30 மணிக்கு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்காடுகளை அருள் பணியாளர்கள், இறை மக்கள், ஆலய நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad