காலாவதியான முறுக்கு விற்ற கடைக்காரர் ரூ.10,047.60 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

காலாவதியான முறுக்கு விற்ற கடைக்காரர் ரூ.10,047.60 இழப்பீடு வழங்க தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

ஆகஸ்ட்.24, தூத்துக்குடி அசோக் நகரைச் சார்ந்த மகேஷ் என்பவர் மதுரை மாட்டுத் தாவணியிலுள்ள ஒரு பிரபல லாலா மிட்டாய் கடையில் முறுக்கு வாங்கியுள்ளார். அதைப் பயன்படுத்துவதற்காக எடுத்த போது அது காலாவதியானது எனத் தெரிந்துள்ளது. காலாவதியான தேதியிலிருந்து 9 நாட்கள் கடந்து கடைக்காரரால் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 

உடனே கடைக்காரரிடம் கொண்டு சென்று மாற்றுப் பொருள் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் கடைக்காரர் மாற்றுப் பொருள் தர மறுத்ததுடன் மனுதாரரை உதாசினப்படுத்தியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆனால் அதன் பின்னரும் உரிய பதில் கிடைக்காததால் தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் ஆ.சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் காலாவதியான முறுக்குக்குரிய விலையான ரூ.47.60, சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு ரூ.5,000, வழக்கு செலவுத் தொகை ரூ.5,000 ஆக மொத்தம் ரூ.10,047.60 ஐ இரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் இல்லையென்றால் வழக்குத் தொடர்ந்த நாள் முதல் 9% வட்டியுடன் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad