திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 24 August 2024

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது!

திருச்செந்தூர், ஆகஸ்ட்.24, உலகப் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆவணி திருவிழாவும் ஒன்று இந்த ஆண்டுக்கான ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

ஆவணித் திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும் 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காலை 5:15 மணிக்கு திருவிழா துவங்குவதற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி
நடைபெற்றது.

பின்னர் தர்ப்பை புல்களாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட செப்பு கொடி மரத்திற்கு பால், தயிர், மஞ்சள், விபூதி போன்ற 16 வகையான விசேஷ அபிஷேகமும் செய்யப்பட்டு, மஹா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்தை எழுப்பினார்கள்.

12 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி குமர விடங்க பெருமானும் வள்ளி அம்பாளும் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து சிவன் கோவிலை வந்தடையும்.

மேலும் முக்கிய திருவிழாவான 5ம் நாளன்று சுவாமிக்கும் வள்ளி அம்பாளுக்கும் குடவருவாயில் தீபாராதனை நடைபெறும்.7ஆம் திருவிழா அன்று ஷண்முகர் சிகப்பு சாத்தி கோலத்திலும் 8ம் திருவிழா நாளன்று வெள்ளை சாத்தி மற்றும் பச்சை சாத்தி கோலத்திலும் எழுந்தருளி வலம் வருவார். 

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் திருநாள் வருகிற 2ஆம் தேதி நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் திருக்கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன் கலந்து கொண்டனர். 

திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் இணை ஆணையர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக -தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad