கயத்தார் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 11.07.2024 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணை. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 9 July 2024

கயத்தார் வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 11.07.2024 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணை.

 


கயத்தார்  வீரன் அழகுமுத்துகோன் பிறந்தநாள் விழா  மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 11.07.2024 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணை.


தூத்துக்குடி மாவட்டம், ஜூலை 09, கயத்தார் வட்டம் கட்டாலங்குளம் கிராமத்தில் 11.07.2024 அன்று வீரன் அழகுமுத்துகோன்- 314-வது பிறந்தநாள் விழா நடைபெற உள்ளதால் கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள 39 டாஸ்மாக்  மதுபானக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக்கூடங்கள் 11.07.2024 அன்று ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு ஆணையிடப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேற்படி டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் மதுபானக்கூடங்களில் மதுபான விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. 

          

மேற்குறிப்பிட்ட தினத்தில் மேற்படி டாஸ்மாக்  மதுபானக் கடையிலிருந்து மதுபான விற்னை, மதுபானத்தை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச்சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்டம் கயததாறு தாலுகா தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment

Post Top Ad