திருச்செந்தூர் முருகனுக்கும் 978 கிராம் எடை கொண்ட தங்க காசு மாலையை கொடுத்த பக்தர்! 18 ஆண்டு கால வேண்டுதலை நிறைவேற்றியதால் பக்தர் மகிழ்ச்சி! - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Tuesday, 9 July 2024

திருச்செந்தூர் முருகனுக்கும் 978 கிராம் எடை கொண்ட தங்க காசு மாலையை கொடுத்த பக்தர்! 18 ஆண்டு கால வேண்டுதலை நிறைவேற்றியதால் பக்தர் மகிழ்ச்சி!

IMG-20240709-WA0359

திருச்செந்தூர் முருகனுக்கும் 978 கிராம் எடை கொண்ட தங்க காசு மாலையை கொடுத்த பக்தர்! 18 ஆண்டு கால வேண்டுதலை நிறைவேற்றியதால்  பக்தர் மகிழ்ச்சி! 

IMG-20240709-WA0360

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசாமி கோவில் மூலவருக்கு பெருநாழி என்ற ஊரை சேர்ந்த போஸ் - மல்லிகா குடும்பத்தினர் ரூபாய் 70 லட்சம் மதிப்பிலான 978 கிராம் எடை உள்ள தங்க காசு மாலையை திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கினர்.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு பெருநாழியை ஊரை சேர்ந்தவர் போஸ்(67). மதுரை கேகே நகரில் வசித்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா. இவர்களுக்கு சரவணபிரியா, கணேச பாண்டியன், சுமதி சக்திவேல், ரதி ஈஸ்வரன் ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். மகள்களுக்கு திருமணமானதும் திருச்செந்தூர் கோயில் மூலவருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டிக் கொண்டார்.   இந்நிலையில் போஸ் - மல்லிகா குடும்பத்தினர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்தனர். போஸ் தனது குடும்பத்துடன் கோயிலுக்கு சென்று பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் திருச்செந்தூர் கோயில் மூலவர் முருகனுக்கு ரூ. 70 லட்சம் மதிப்பிலான 978 கிராம் எடை கொண்ட 90 காசுகள் அடங்கிய தங்க காசுமாலையை பெருநாழி போஸ் மல்லிகா குடும்பத்தினர் திருக்கோயில் இணை ஆணையர் கார்த்திக்கிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பேஸ்கார் ரமேஷ்,


கோயில் உள்துறை சூப்பிரண்டுகள் அற்புத மணி,  விஜயலட்சுமி, சுபிதா,  கோயில் பணியாளர்கள் வள்ளிநாயகம், கிட்டு சுப்பிரமணியம் ஆகியோர் உடனிருந்தனர். 


இது குறித்து போஸ் கூறுகையில் திருச்செந்தூர் கோவிலுக்கு மாதந்தோறும் வந்து தரிசனம் செய்வேன். மகள்களுக்கு திருமணமானதும் நேர்த்திக்கடன் செலுத்துவதாக வேண்டியிருந்தேன். 18 ஆண்டுகால வேண்டுதல் இப்போது நிறைவேறிய இருக்கிறது என்றார்.


தமிழக குரல் செய்திகளுக்காக- தூத்துக்குடி மாவட்ட நிருபர் சுந்தரராமன்

No comments:

Post a Comment

Post Top Ad