குளத்தூர் அருகே தனியார் கல்லூரியில் "இந்திய சுதந்திர பவளவிழாவில் இருந்து பொன்னான பாரதம் நோக்கி" சிறப்பு சொற்பொழிவு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Monday, 4 April 2022

குளத்தூர் அருகே தனியார் கல்லூரியில் "இந்திய சுதந்திர பவளவிழாவில் இருந்து பொன்னான பாரதம் நோக்கி" சிறப்பு சொற்பொழிவு.

WhatsApp%20Image%202022-04-04%20at%206.06.01%20PM
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் குளத்தூரில் டி. எம். எம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்துறை சார்பில், இந்திய சுதந்திர பவளவிழாவில் இருந்து பொன்னான பாரதம் நோக்கி என்ற தலைப்பில் சிறப்புச்  சொற்பொழிவு ஏப்ரல் 4 அன்று நடைபெற்றது குளத்தூர் பத்ரகாளியம்மன் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தாமஸ்  தலைமையில் தமிழ்தாய் வாழ்த்துடன்  ஆரம்பமானது.


வருகை தந்த அனைவரையும் தமிழ்துறை தலைவி முனைவர் அன்னலட்சுமி வரவேற்றார். இந்திய சுதந்திரம் பற்றிய பல  கருத்துக்களை எடுத்துரைத்து கல்லூரி இயக்குனர்.முனைவர் கோபால் தலைமையுரை வழங்கினார்.. அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் பிரம்ம குமாரி சகோதரி காயத்ரி ஆன்மிக கருத்துக்களை  எடுத்துரைத்து வாழ்க்கை தத்துவங்களை கூறினார்.. ஆன்மிகம் சம்பந்தமான உறுதிமொழி மாணவ மாணவிகளால் எடுக்கப்பட்டது.


பின்னர் மக்கள் தொடர்பு அதிகாரி கெங்குமணி சிறப்புரை நல்கினார்.தமிழ்துறை பேராசிரியர் செல்வி.ஜெயபுனிதா ராஜேஸ்வரி நன்றியுரை வழங்கினார்.நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவடைந்தது. இவ்விழாவினை தமிழ்துறை பேராசிரியர் முனைவர்.வசந்தி  வழங்கினார், கல்லூரி முதல்வர் முனைவர் அன்பழகன் வழிகாட்டுதலின் படி தமிழ்துறை பேராசிரியர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad