விளாத்திகுளம் தாலுகாவிலுள்ள TNTDA பள்ளியில் மாபெரும் இலவச கண்சிகிச்சை முகாம் ஸ்காட் நிறுவனத்தலைவர் டாக்டர். கீளீட்டஸ்பாபு வழிகாட்டுதலின் படி விளாத்திகுளம் ஸ்காட் நிர்மான் பணியாளர்கள் மற்றும் சத்ய சாயி சேவா சமிதி கன்வீனர் இளையராஜா, தூத்துக்குடி விஜய் இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவனர் வி. சிவப்பிரசாத் ஆகியோர் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இம்முகாமில் தூத்துக்குடி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவ குழுவினர் வருகை தந்து 105 நபர்களுக்கு பரிசோதனை செய்து 44 நபர்கள் கண் அறுவை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள்.
இம்முகாமில் கலந்து கொண்ட 10 நபர்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது .கண் நரம்பு மண்டலம் பாதித்த 15 நபர்கள் திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டார்கள்.பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
No comments:
Post a Comment