கொத்துவா பள்ளிவாசல் தெருவில் வசித்து வரும் முகமதுஅலி என்பவருக்கு சொந்தமான பழைய பேப்பர், பிளாஸ்டிக் சாக்கு குடோன் அமைந்துள்ளது. மாலை சுமார் 4.30 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சுமார் 500 மீட்டருக்கு மேலாக கரும்புகையானது சூழ்ந்துள்ளது.
திடீரென குடோனில் பற்றி எரிந்து தீயைக் கண்டு அக்கம்பக்கத்தின் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மீட்புக் குழுவினர் மற்றும் ஒரு தண்ணீர் டேங்கர் லாரியை உபயோகித்து தீயை அணைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு பல மணிநேரம் போராடி தீயை அனைத்தனர்.
இதில் பல ஆயிரம் மதிப்புள்ளபிளாஸ்டிக் சாக்குகள் அனைத்தும் எரிந்து நாசமாகின, தீ விபத்துக்கான காரணம் குறித்து சாத்தான்குளம் போலீசார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment