தமிழக உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் இன்று தூத்துக்குடி அனல்மின் நிலைய தலைமைப் பொறியாளர் கிருஷ்ணகுமார் அவர்களை நிலைய அலுவலகத்தில் சந்தித்து சாம்பல் செங்கல் உற்பத்திக்கு மூலப்பொருளான அனல் மின்நிலைய உலர் சாம்பலை இதுவரை உறபத்தியாளர்களுக்கு இலவசமாக அனல் மின்நிலைய நிர்வாகம் வழங்கிவந்தது. தற்போது கடந்த செப்டம்பர் 22லிருந்து ரூபாய் 610க்கு விற்பனை செய்யலாம் என்று மத்திய மின் துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதனையடுத்து அனல் மின்நிலைய நிர்வாகம் இலவசமாக வழங்கிவந்த உலர் சாம்பலை ரூ.610 க்கு விற்பனை செய்து வருகின்றது. இந்த திடீர் விலைவுயர்வால் இத் தொழிலை நம்பி வாழ்கை நடத்தும் உற்பத்தியாளர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விகுறியாகியுள்ளது என்றும்; தூத்துக்குடி அனல் மின்நிலைய நிர்வாகம் எங்களது உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீண்டும் பழைய முறையில் உலர் சாம்பலை எங்கள் உற்பத்தியாளர்களுக்கு இலவசமாக வழங்கிட வேண்டுமென 108 உற்பத்தியாளர்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தனர்.
இந் நிகழ்வின்போது அனல் மின் நிலைய மேற்பார்வை பொறியாளர் (சிவில்) சிவக்குமார், அனல் மின் நிலைய மேலாளர் ஜெயக்குமார், இயந்திரவியல் மேற்பார்வை பொறியாளர் கோபால் மற்றும் உலர் சாம்பல் செங்கல் உற்பத்தியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment