திருவைகுண்டம் அருகே உள்ள பேரூர் கஸ்பா குளத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் ஆய்வு. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 December 2024

திருவைகுண்டம் அருகே உள்ள பேரூர் கஸ்பா குளத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் ஆய்வு.

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவைகுண்டம் அருகே உள்ள பேரூர் கஸ்பா குளத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால் பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவைகுண்டம் அருகே உள்ள பேரூர் கஸ்பா குளத்தில் நிரம்பும் தருவாயில் உள்ள நிலையில் அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் இன்று (13.12.2024) ஆய்வு செய்தார்.

பின்னர், மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் திருவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களில் உள்ள ஆற்றங்கரையோர மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

கோவில்பட்டி, விளாத்திகுளம் பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. கோவில்பட்டி பகுதியில் 36 செ.மீ மழை பெய்துள்ளது. அந்த பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 397 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தென்காசி, குற்றாலம், மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அங்கிருந்து 

தூத்துக்குடி பகுதிக்கு 60,000 கன அடி நீர் வரும் என தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது 20 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. திருவைகுண்டம், ஏரல் பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். 
நீர் இருப்பு குறைவாக உள்ள குளங்களில் நீரை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை பொதுப்பணி துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

தமிழக முதலமைச்சர் காணொளி மூலமாக வழங்கிய அறிவுரையின்படி நடவடிக்கைகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நீர்நிலை பகுதிகளில் வேடிக்கை பார்ப்பதோ, சிறுவர்கள் மீன்பிடிப்பதோ போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை பெய்த மழையில் மண் சுவற்றால் கட்டப்பட்ட இரண்டு வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. திருவைகுண்டம், ஏரல் ஆற்று கரையோரம் உள்ள மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad