தமிழ்நாட்டில் உள்ள கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள்,வேதியர்கள், சீஷப்பிள்ளைகள் பாடகர்கள், கல்லறை பணியாளர்கள்,கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் போன்றவர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய 18 வயது பூர்த்தி செய்து 60 வயதுக்குள்ளவராகவும் கிறித்துவ மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
இந்நலவாரிய உறுப்பினராக பதிவு பெற தகுதியுடையவர் என்பதற்கு ஆதாரமாக அவர் பணிபுரியும் கிறித்துவ தேவாலயத்தின் நிர்வாகி அல்லது கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரிடமிருந்து சான்றிதழ் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் போன்று நலத் திட்டங்கள் வழங்கப்படும்.
நலத்திட்டங்கள்
6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை மற்றும் ஐடிஐ/ பாலிடெக்னிக் படிப்புகளுக்கு ரூ.1000/- 12ம் வகுப்பு முதல் தொழிற்கல்வி படிப்பு வரை ரூ.1500/-. விபத்தினால் மரணம் ஏற்பட்டால் உதவித்தொகை ரூ1,25,000/-. விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப உதவித்தொகை அதிகபட்சமாக ரூ 1,00,000/-. இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை. ரூ.30,000/- ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை ரூ.5,000/-.
திருமண உதவித்தொகை (ஆண்- ரூ3,000/- மற்றும் பெண்- ரூ.5,000/-). மகப்பேறு உதவித்தொகை - ரூ 6,000/-. கருச்சிதைவு / கருக்கலைவு உதவித்தொகை -ரூ. 3000/- மூக்குக் கண்ணாடி செலவின தொகை ஈடுசெய்தல் ரூ. 750/-. முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும); ரூ.1,200/-. வீதம் வழங்கப்படும்.
இந்நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவத்தை தூத்துக்குடி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலிக் திருச்சபை அதன் பேராயர்கள் மற்றும் ஆயர்கள்,
புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்பிக்க வேண்டும்.
மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட பிற்படுத்தப்பட்போர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர்ஃ மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு கட்டணமின்றி அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுமான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்லைவர் க.இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment