தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 December 2024

தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மாற்றுப் பாதையை பயன்படுத்த அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையின் காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றை கடந்து செல்லும் சாலை பாதுகாப்பு காரணங்களுக்காக தற்சமயம் தடை செய்யப்பட்டுள்ளது. 

எனவே பொதுமக்கள் மாற்றுப் பதையை பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வாகனங்கள் முக்காணி, ஏரல், பேட்மாநகரம், ஆழ்வார்தோப்பு, ஆழ்வார்திருநகரி பாலம் வழியாக தென்திருப்பேரை, குரும்பூர் சென்று திருச்செந்தூர் செல்லும் படி மாற்றுப் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்லக்கூடிய பாதை தடைபட்டுள்ளதால் மாற்று பாதை அறிவிக்கப்பட்டது.


No comments:

Post a Comment

Post Top Ad