புன்னக்காயல், நாலு மாவடி, சாத்தான்குளத்திற்கு திருச்செந்தூரில் புதிய வழித்தடத்தில் பஸ் சேவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.
திருச்செந்தூர் பேருந்து நிலைய தளம் புதுப்பித்தல் மற்றும் புன்னக்காயல், நாலுமாவடி, சாத்தான்குளம் புதிய வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்க தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சுகுமாரன், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ் ஆர் எஸ் உமரிசங்கர், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், பில்லா ஜெகன், வழக்கறிஞர் கிருபா, திருச்செந்தூர் ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ஏ பி ரமேஷ், திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் சிவ ஆனந்தி,
நகர திமுக செயலாளர் வாள் ஆர் சுடலை, துணைச் செயலாளர் தோப்பூர் பெரு மகாராஜன்,நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சோமசுந்தரி, ஆனந்தராமச்சந்திரன், திமுக நிர்வாகிகள் சோடா ரவி, சந்திரசேகர், சுதாகர் உட்பட தி மு க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக MT.அந்தோணி ராஜா திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.
No comments:
Post a Comment