சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் 313வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் வட்டம், கட்டாலங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள மணிமண்டபத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவில், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி கோட்டாட்சியர் ஜெயா, நகராட்சி தலைவர் கருணாநிதி, ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், கயத்தார் வட்டாட்சியர் நாகராஜன் மற்றும் வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுதாரர்கள் ராஜேஸ்வரி, ராணி, வனஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு கட்டாலங்குளம் பகுதியில் உள்ள அவரது மணிமண்டபம் வளாகம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 1450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவேஷ் குமார் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் ஆகியோர் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.
No comments:
Post a Comment