

முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஸ்பிக்நகர் மெயின் ரோட்டில் (10.07.2023) மாலையில் 8 வயது சிறுமி ஒருவர் அழுது கொண்டு நின்று கொண்டிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அல்லியரசன், தலைமை காவலர் சிவகுமார், முதல் நிலை காவலர் சந்தானகுமார் மற்றும் முத்தையாபுரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் ஜான்சன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு நின்று கொண்டிருந்த 8 வயது சிறுமியை மீட்டு விசாரணை மேற்கொண்டபோது, மேற்படி சிறுமி முத்தையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாரதி நகர் பகுதியில் பெற்றோரின் துணை இல்லாமல் தனது பாட்டி கருப்பாயி என்பவருடன் வசித்து வருவதாகவும், மேற்படி பாட்டி இன்று காலையிலிருந்து வீட்டிற்கு வரவில்லை என்பதால் சிறுமி தனது பாட்டியை தேடி ஸ்பிக்நகர் மெயின் ரோட்டில் தனியாக நின்று கொண்டிருந்ததாகவும் தெரியவந்தது.
உடனே மேற்படி போலீசார் 8 வயது சிறுமியை மீட்டு தூத்துக்குடி சைல்ட் ஹெல்ப் லைன் ஒருங்கிணைப்பாளர் சங்கரேஸ்வரி என்பவர் மூலமாக தூத்துக்குடி அரசு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர். சிறுமியை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்த முத்தையாபுரம் காவல் நிலைய போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் வெகுவாக பாராட்டினார்.
No comments:
Post a Comment