தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், ஆழ்வார் திருநகரி, புனித அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த ஜூன் 30-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் விமரிசையாக நடந்தது, திருவிழாவில் கடந்த 10 நாட்களாக நற்கருணை ஆசீர், திருப்பலி, மறையுறை நடைபெற்றது பத்தாவது திருவிழாவனா நேற்று 09.07.2023 அன்னையின் சப்பரபவனி நடந்தது.


இந்த பவனி ஆனது ஆழ்வார்திருனகரியின் பிரதான சாலைகள், கடை வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலய வளாகத்திற்க்குள் சென்றடைந்தது. வீதியெங்கும் கழியல் விளையாட்டு குழுவினர் கலை நிகழ்ச்சி நடந்தது, பவனியில் தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க தலைவர் சித்ராங்கதன், மாவட்ட பொதுச் செயலாளர் ராஜா, மாவட்ட சிறுபான்மையினர் அணி தலைவர் ஸ்டீபன் லோபோ, மாவட்ட செயலாளர் கனல் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment