கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் தையல் தொழிலாளிகளின் கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 9 July 2023

கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் தையல் தொழிலாளிகளின் கூட்டம்

தூத்துக்குடி விக்டோரியா சாலையில் உள்ள கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் இணைப்பு மாவட்ட தலைமை அலுவலகத்தில் தையல் தொழிலாளிகளின் கூட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றதில் தையல் தொழிலாளர்களின் பொருளாதார மேம்பாட்டு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு அவர்களுக்கான தனி நிர்வாக குழு அமைக்கப்பட்டு தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக தலைவர்கள், செயலாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
இந்த தையல் தொழிலாளர்கான கூட்டத்திற்கு கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மின்னல் அம்ஜத் தலைமை வகுத்து வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு அழைப்பாளராக கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில தலைவர் குருநாகலிங்கம் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.கூட்டத்தின் இறுதியில் புதியதாக தேர்வு செய்யப்பட்ட தையல் தொழிலாளர்களின் குழு தலைவர் வேணி நன்றியுரை நிகழ்த்தினர். இக்கூட்டத்தில் திரளான தையல் தொழிலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad