ஜூன் 21,9வது சர்வதேச யோகா தினத்தில் தூத்துக்குடி ஒட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளியில் அரசு மருத்துவமனை யோகா மற்றும் இயற்கை மருத்துவர் இந்துமதி, சிகிச்சை உதவியாளர் சிவசங்கரி குழுவினர் லயன்ஸ் கிளப் தலைவர் லயன்ஸ் தங்கராஜ் மற்றும் உறுப்பினர்களுடன் சேர்ந்து
மாணவ, மாணவியர்களுக்கு யோகா பயிற்சி தினமும் மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கம் தந்து,செய்முறை பயிற்சியும் அளித்தனர் .விழா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணன் மற்றும் ஆசிரிய ஆசிரியைகள்,அலுவலக பணியாளர்கள் செய்திருந்தனர்.
லயன்ஸ் கிளப் அமைப்பினர்கள் சார்பாக அனைவருக்கும் எலுமிச்சை சாறு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment