

அவர் பேசுகையில் உலகத்தை மாற்ற நீங்கள் பயன்படுத்தக்கூடிய மிக சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வி எனும் நெல்சன் மண்டேலாவின் வரிகளை மேற்கோள் காட்டி வாழ்த்துரை வழங்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்புரை ஆற்றிய பாளையங்கோட்டை தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி தாளாளரும் அருட்தந்தையுமான ஆல்பர்ட் ஜோசப் மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் தவறு செய்வது இயல்பு ஆனால் அந்த தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள். அப்போது உங்கள் வாழ்வில் உயர்வு வரும் அத்துடன் நற்குணங்கள், திறமை, அறிவாற்றல் இவற்றுடன் சக மனிதனுக்கு நன்மை செய்ய பழகிக் கொள்ளுங்கள் என பேசினார். தொடர்ந்து கல்லூரியில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழுடன் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதில் தற்போது நடைபெற்று முடிந்த அரசு தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற ஜமீலா நிகார் என்ற மாணவிக்கு சான்றுடன் கேடயம் வழங்கப்பட்டது. கல்லூரியில் 2022-2023 வருடத்திற்கான சிறந்த மாணவருக்கான விருது சக்தி பேச்சியப்பனுக்கு வழங்கப்பட்டது. கல்லூரியில் பயின்று வேலைவாய்ப்பு முகாமில் பணி நியமன ஆணையை பெற்றுக் கொண்ட 42 மாணவர்களுக்கு விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முதலாம் ஆண்டு துறை தலைவர் வெங்கடேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வேதியல் துறை மூத்த விரிவுரையாளர் பால பிரபா நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் இயற்பியல் ஆசிரியர் மைக்கேல் ராயன், துணை முதல்வர் ஜாய்ஸ் மேரி, துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments:
Post a Comment