முடிவைத்தானந்தல் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Tuesday, 20 June 2023

முடிவைத்தானந்தல் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டம்  முடிவைத்தானந்தல் ஊராட்சியில் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் ரம்யா, துணை தலைவர் கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு சமூகப் பணியாளர்  கார்த்திகா  கலந்துகொண்டு குழந்தைகள் பாதுகாப்பு பற்றியும் குழந்தை தொழிலாளர் தடுப்பு முறைகள் பற்றியும் குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவுகள் தரும்பொழுது அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் பற்றியும்,18 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மனரீதியாகவோ உடல்ரீதியாகவோ பாலியல் தொந்தரவு கொடுப்பது குற்றம் இதற்கு போக்சூர் சட்டம் 2012-ன் படி அதிகபட்சமாக மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து யார் வேண்டுமானாலும் புகார் அளிக்கலாம் புகார் அளிப்பவரின் விவரங்கள் பாதுகாக்கப்படும் அதற்கான தகவலை தருவதற்கான வாட்ஸாப் 6374810811என்ற எண்ணில் தகவல்களை தெரிவிக்கலாம் என்றும் கூறினார் கூட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர் சிவபெருமாள், தனிப்பிரிவு தலைமை காவலர் சந்தோஷ் செல்வம்,கிராம செவிலியர் மகேஸ்வரி,9வது வார்டு உறுப்பினர் வீரமாகாளி அங்கன்வாடி பணியாளர்கள் பேச்சியம்மாள் அழகு சுந்தரி சுப்புலட்சுமி இந்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாரிமுத்து,சுய உதவிக் குழு உறுப்பினர் தனலட்சுமி மற்றும் வார்டு உறுப்பினர் கள்,பள்ளி குழந்தைகள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad