மாவட்ட எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 20 June 2023

மாவட்ட எஸ். பி. தலைமையில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம்

 

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் 19.06.2023 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்தும், கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்வது குறித்தும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீதும் ரவுடிகள் மீது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
இந்த ஆய்வுக்கூட்டத்திற்கு தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர் முருகபெருமாள், கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் - II உதவி வழக்கறிஞர் ஆலன்ராயன், ஸ்ரீவைகுண்டம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் - II உதவி வழக்கறிஞர் ராஜமோகன், விளாத்திகுளம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உதவி வழக்கறிஞர்  ரேவதி, தூத்துக்குடி அரசு மருத்து கல்லூரி மருத்துவமனை உதவி உறைவிட மருத்துவர் கரோலின் ஜெபசெல்வி, தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், தூத்துக்குடி மாவட்ட இயங்கும் தடய அறிவியல் ஆய்வக உதவி இயக்குநர்  கலாலெட்சுமி, தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோரும்,
தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், காவல் துணை கண்காணிப்பாளர்கள் தூத்துக்குடி ஊரக உட்கோட்டம் சுரேஷ், திருச்செந்தூர் வசந்த்ராஜ், ஸ்ரீவைகுண்டம் மாயவன், கோவில்பட்டி வெங்கடேஷ், மணியாச்சி லோகேஸ்வரன், விளாத்திகுளம் ஜெயச்சந்திரன், சாத்தான்குளம் அருள், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஜெயராஜ், நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு  சம்பத் உட்பட மாவட்டத்தின் அனைத்து காவல் ஆய்வாளர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad