திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்செந்தூர் ஒன்றியக்குழு தலைவர் செல்வி வடமலைபாண்டியன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்றோ, பொங்கலரசி, சுகாதார ஆய்வாளர் ஜெய்சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கியதை தொடர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.


கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாவாஜி பக்கீர்முகைதீன், பழனி கார்த்திகேயன், தொழிலாளர் உதவி ஆய்வாளர் ஜோதிலெட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானராஜ் (அம்மன்புரம்), சின்னத்துரை (மேலப்புதுக்குடி), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஒருங்கிணைப்பாளர் செல்வி பிளாரன்ஸ், புனித சூசை அறநிலைய சமூக பணியாளர் செல்வராணி மெரினா பர்னாந்து உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment