கருங்குளம் வடக்கு ஒன்றியம் சார்பாக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி ஜி அவர்களின் 9 ஆண்டு கால சாதனை விளக்க இரண்டாவது தெருமுனை பிரச்சாரக் கூட்டம் மிகவும் சீரும் சிறப்புமாக அணியாபரநல்லூர் கிராமத்தில் வைத்து நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் L.கிஷோர் குமார், மாவட்ட செயலாளர் வக்கில் R.பிரபு ஒன்றிய தலைவர் S.நங்கமுத்து, ,மாவட்ட விவசாய அணி திட்ட பொறுப்பாளர் செல்வின் சவான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்த நிகழ்ச்சியின்போது 75 ஏழை பெண்களுக்கு சேலை வழங்கப்பட்டதுடன் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்டச் செயலாளர் P.முருகன் சக்தி கேந்திரத்திற்கு உட்பட்ட நிர்வாகிகள் ஆன்மீகம் மற்றும் கோவில் மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் P.விநாயகப் பெருமான்,ஒன்றிய செயலாளர் S.குமார்,இளைஞர் அணி ஒன்றிய தலைவர் A.சிலம்பரசன், சமூக ஊடகப்பிரிவு ஒன்றிய தலைவர் M.சின்னத்துரை,கிளைத் தலைவர் S.இசக்கிமுத்து மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளை தலைவர்கள் ஆகியோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
No comments:
Post a Comment