நாசரேத் பஞ்சாயத்து குப்பை கிடங்கு அருகே விபத்து. - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 June 2023

நாசரேத் பஞ்சாயத்து குப்பை கிடங்கு அருகே விபத்து.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத் அருகே, கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதாவது 16/06/2023 மாலை சுமார் 4 மணி அளவில் வாழையடி பனை ஏறும் தொழில் செய்து வரும் M. துரைராஜ் என்பவர்  நாசரேத் தனியார் கல்லூரிக்கு பின்புறம் அமைந்துள்ள தனது தோட்டத்தில் பனை மரம் ஏறுவதற்காக தனது TVS XL இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார்.  

நாசரேத் பஞ்சாயத்து குப்பை கிடங்கு அருகில் செல்லும்போது, எதிரே குப்பை கொட்டிவிட்டு வந்த சிகப்பு கலர் நாசரேத் பஞ்சாயத்து டிராக்டர், துரைராஜ் ஓட்டி வந்த வாகனம் மீது பயங்கரமாக மோதியதில், இரு சக்கர வாகனத்தில் வந்த துரைராஜ் கீழே விழுந்துள்ளார். அவர் கால் மீது சிகப்பு கலர் நாசரேத் பஞ்சாயத்து டிராக்டரின் முன் சக்கரம் ஏறி இறங்கியதாக கூறப்படுகிறது. மேலும் அவரின் இரு சக்கர வாகனத்தின் முன் பக்கம் நொறுங்கியுள்ளது. மோதிய நாசரேத் பஞ்சாயத்து சிகப்பு கலர் டிராக்டர் நிற்காமல் சென்று விட்டதால், இத்தகவல் தெரிந்த துரைராஜின் நண்பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். 


அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டு, மேல் சிகிச்சைக்காக 108 வாகனத்தில் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு தற்போது சிகிச்சை எடுத்து வருகிறார். தகவலறிந்த நாசரேத் காவல்துறையினர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு சென்று புகார் பெற்று நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சார்பில் தெவிவிக்கபட்டுள்ளது. இது குறித்து துரைராஜின் நண்பர்கள் நாசரேத் பஞ்சாயத்தை தொடர்பு கொண்டபோது, யாருமே இச்சம்பவத்தில் ஈடுபடவில்லை என கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து நாசரேத் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். 


இது தவிர நாசரேத் பஞ்சாயத்து குப்பை கிடங்கில் எரியும் தீயினால், அதிலிருந்து வரும் புகையின் துர்நாற்றத்தால் அருகில் இருக்கும் கல்லூரி மாணவர்கள், பொது மக்களுக்கும் உடல்நிலை பாதிப்பு அடையக்கூடும் என்றும், மேலும், நீர்வளமும் நில வளமும் மாசுபடுகிறது. மேற்படி குப்பை கிடங்கை முறையாக பராமரிக்க நாசரேத் பஞ்சாயத்து முன்வருமா? என சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகின்றன.

No comments:

Post a Comment

Post Top Ad