

முடிவில் முதலாமாண்டு துறை தலைவர் வெங்கடேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலாமாண்டு துறை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். ஏற்பாடுகளை தாளாளர் டாக்டர் ஸ்டீபன் தலைமையில் முதலாம் ஆண்டு ஆசிரியர் லயன் சரவணன், முதலாம் ஆண்டு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.
அதே போல் நாசரேத் மர்காஷியஸ் மேல்நிலைப் பள்ளி என்.சி.சி. மாணவர்கள் சார்பில் சர்வ தேச யோகா தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் கென்னடி தேவராஜ் தலைமை தாங்கினார்.
உதவி தலைமையாசிரியர் சார்லஸ் திரவியம் முன்னிலை வகித்தார். யோகா பயிற்சியாளர் வினோத் மாணவர்களுக்கு யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி அளித்தார். நிறைவில் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்பட்டது. என்.சி.சி. ஆசிரியர் சுஜித் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தாளாளர் சுதாகர் தலைமையில் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் செய்து இருந்தனர்.
No comments:
Post a Comment