தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத் சந்தி பகுதியில் நாளை 24.06.2023 சனிக்கிழமை காலை 10 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடி மாவட்ட செயலர் புதுக்கோட்டை ப.செல்வம் தலைமையில், மாநில துணைப் பொதுச் செயலர் தி.மு.இராஜேந்திரன் முன்னிலையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளது.


இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மதிக்காது, மக்களால் தேர்வு ஆன தமிழ்நாட்டு அரசுக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவியை இந்திய குடியரசுத் தலைவர் பொறுப்பு நீக்கம் செய்யக்கோரி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட மதிமுக சார்பில் மாபெரும் கையெழுத்து இயக்கம் அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment