தூத்துக்குடி மாவட்டம், ஏரல் வட்டம், நாசரேத், ஜெயராஜ் அன்ன பாக்கியம் சிஎஸ்ஐ பொறியியல் கல்லூரியில் நாளை 24.06.2023 சனிக்கிழமை பொறியியல் மற்றும் டிப்ளோமா படிப்பு படித்தவர்களுக்கு டிவிஎஸ் சுந்தரம் பாஸ்டெனர்ஸ் லிமிடெட் கம்பெனி இணைத்து நடத்தும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. பொறியியல் படித்தவர்களுக்கு ஊதியமாக ரூபாய் 14 ஆயிரத்து 650, பட்டய படிப்பு படித்தவர்களுக்கு 13,658 ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன, மேலும் இந்த வாய்ப்பினை வேலைக்காக காத்திருப்போர் பயன்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தளத்தில், தங்களது பெயர்களை பதிவு செய்து கலந்து கொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு 9486714747 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடுகளை பொறியியல் கல்லூரியின் தாளாளர் ஜெயக்குமார் ரூபன், முதல்வர் டாக்டர் ஜெயக்குமார், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஒருங்கிணைப்பாளர் ஜாஸ்மின் சேவியர் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
இந்த முகாமில் கலந்துகொள்ள பின்வரும் இணைப்பை பயன்படுத்தவும். :https://docs.google.com/forms/d/e/1FAIpQLSedDr3TR8eR-VJiPCerRBD__vnTvKhlV78WV6OYoYl9y5x9KQ/viewform?usp=sf_link

No comments:
Post a Comment