இதில் குறிப்பாக கடற்கரை பகுதியினை சேர்ந்த ஆளும் கட்சி தொண்டர்கள் பெரும்பாலானோர் மாற்று கட்சிக்கு ஆதரவாக செயல் பட ஆரம்பித்துள்ளனர். இது ஆளும் கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கான காரணம் என்னவென்று அலசியபோது, ஆளும் கட்சி தொண்டர்களின் பல பிரச்சினைகளை, கட்சி ஒருங்கிணைப்பாளர் சரி செய்ய முன் வர வில்லை என்றும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருச்செந்தூர், ஆலந்தலை, அமலிநகர் போன்ற பகுதியில் ஏற்பட்ட மீனவர் சமுதாய மக்களின் பிரச்சினைகள், மேலும் எவ்வித மக்கள் பிரச்சினைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சென்ற 2023 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்பில் இருந்து, தற்போது 2024 ஆம் ஆண்டும் ஏற்பட்ட மழை வெள்ளப் பாதிப்புகள் வரை இன்னும் மீள முடியாமல் தவிக்கும் பல குடும்பங்கள், அரசின் பலன்களை பெற்று தருவதில் தாமதம். இப்படி பல பிரச்சினைகளை அடுக்கி கொண்டே போகலாம் என்று கூறும் கடற்கரை மக்கள்.
மேலும், இதற்கு சான்றாக இரு பெரும் ஊர்களின் வழியே கிராம புறங்களுக்கு செல்ல முடியாத பாலங்களை விவரிக்கின்றனர். இதனால் பல இடங்களில் வியாபாரம் மந்த நிலையில் உள்ளது என்றும், இந்த கட்டமைப்பு வசதிகளையே செய்ய முடியாத அரசு எப்படி மக்களுக்கு நலத்திட்டங்களை வழங்க முடியும் என்று கேள்வி கேட்கும் நிலையில் இருக்கின்றனர்.
No comments:
Post a Comment