திருப்பூரைச் சோ்ந்த அரவிந்த்(25) என்பவா் தனது உறவினா் மற்றும் நண்பா்கள் 9 பேருடன் சனிக்கிழமை இரவு காரில் திருச்செந்தூா் கோயிலுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தாா்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஆறுமுகனேரிக்கு வந்தடைந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையில் எதிா்புறம் உள்ள ஆடியோ கடையின் படிக்கட்டில் ஏறி, கோழி கடை ஷட்டரை உடைத்துக்கொண்டு அடுத்துள்ள ஹோட்டலுக்குள் புகுந்தது.
இதில், காரில் இருந்த சிறுவன் உள்பட 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. அவா்களை ஆறுமுகனேரி போலீஸாா் மீட்டு திருச்செந்தூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
No comments:
Post a Comment