புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம். - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

  

Post Top Ad

Thursday, 2 January 2025

புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம்.

தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் முன்னெடுப்பில்,  திருச்செந்தூர் பூவிழாஞ்செண்டு வாழை, கடம்பூர் போளி, அம்மன்புரம் மொந்தன் வாழை, கருங்கண்ணி பருத்தி, காயல்பட்டினம் தம்மடை ஆகிய ஐந்து பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைக்க வழிவகை செய்யும் முயற்சியாக 

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று (31.12.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. 

இக்கூட்டத்தில் புவிசார் குறியீடு பெறுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் நபார்டு தமிழ்நாடு தென்மண்டல அலுவலக பொது மேலாளர், 

தூத்துக்குடி நபார்டு வங்கியின் உதவிப் பொது மேலாளர், விவசாய பிரதிநிதிகள், MABIF நிர்வாகிகள் மற்றும் புவிசார் குறியீட்டு வல்லுநர், அம்மன்புரம் பஞ்சாயத்து தலைவர் ஞானராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad