தாளமுத்துநகர் பகுதியில் ஆடு திருடியவர் கைது - திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள ஆடு மீட்பு.
தூத்துக்குடி, ஜூலை.09, தாளமுத்துநகர் அருகே தூத்துக்குடி டி.சவேரியார்புரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ் மகன் சேவியர் ஜெகன் (45) என்பவர் தனது வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 07.07.2024 அன்று தனது ஆடுகளை வீட்டில் முன்பு உள்ள ஆட்டை கட்டி வைத்துள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பார்த்த போது அதில் ஒரு ஆடு காணாமல் திருடுபோயுள்ளது.
இதுகுறித்து சேவியர் ஜெகன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டதில் தாளமுத்துநகர் சுனாமி காலனியைச் சேர்ந்த செட்டிபெருமாள் மகன் சரவணக்குமார் (23) என்பவர் மேற்படி சேவியர் ஜெகனின் ஆட்டை திருடியது தெரியவந்தது.
இதனையடுத்து தாளமுத்துநகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜாமணி வழக்குபதிவு செய்து சரவணகுமாரை கைது செய்து, அவரிடமிருந்து திருடப்பட்ட ரூபாய் 20,000/- மதிப்புள்ள ஆட்டையும் பறிமுதல் செய்தார். மேலும் இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம்
தென் மண்டல ஒருங்கிணைப்பாளர்
Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.
No comments:
Post a Comment