தைக்காவூர் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம் - தமிழக குரல்™ - தூத்துக்குடி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 10 July 2024

தைக்காவூர் முத்தாரம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


தைக்காவூர் முத்தாரம்மன் கோவிலில்  கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்...



திருச்செந்தூர் அருகே தைக்காவூரில் அருள்மிகு முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புனரமைப்பு பணிகள் முடிவுக்கு வந்து கும்பாபிஷேகம் நடத்தஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் மகாகணபதி ஹோமம், தீரவ்யாஹூதி, பிரம்மசார்ய பூஜைகளுடன்  விழா தொடங்கியது.
நேற்று செவ்வாய்கிழமை காலை 8.30 மணிக்கு 2ம் கால யாகபூஜை, வேதகார்ச்சனை, திருராகதாளங்கள் சமர்பித்தல், மாலை 6 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, இரவு 7மணிக்கு குரு ஓரையில் எந்திர ஸ்தாபனம்  நடந்தது.
தொடர்ந்து இன்று புதன்கிழமை காலை 6 மணிக்கு 4ம் கால யாகபூஜை, விக்னேஷ்வரபூஜை, கன்னியாபூஜை நடைபெற்றது. தொடர்ந்து காலை 9 மணிக்கு மேல் கடம்புறப்பாடு, விமான கோபுரம், மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகமும் நடந்தது.  சோனக்கன்விளை சிவ ஸ்ரீ  ராஜா சிவம்  சுவாமிகள் வேத மந்திரம் முழங்க கும்பாபிஷேகம்  நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா அபிஷேகமும் மதியம் 1 மணிக்கு விஷேர புஷ்ப அலங்கார தீபாராதனையும் நடந்தது. பின்னர் விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்காக ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் மற்றும் ஊர்மக்கள்  செய்திருந்தனர்.

தமிழக குரல் செய்திகளுக்காக
MT.அந்தோணி ராஜா
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர்.

No comments:

Post a Comment

Post Top Ad